சூர்யா தயாரிக்கும் ஐந்தாவது படம் – ஹீரோவாக நடிக்கிறார் தம்பி கார்த்தி

Get real time updates directly on you device, subscribe now.

suriya

டிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகும் புதுப்படத்தில் அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல் நடிக்கிறார்.

‘புரொடக்‌ஷன்ஸ் நம்பர் 5’ என்று தற்போதைக்கு டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ( நவம்பர் 9-ம் தேதி) ஆரம்பமானது.

Related Posts
1 of 64

பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை சூர்யா தாயார் லட்சுமி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து நாள் சென்னையில் நடைபெறும்.

படத் துவக்க விழாவில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா, இசையமைப்பாளர் டி.இமான், 2டி இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.