டகால்டி- விமர்சனம்

“தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்” என்பது பழமொழி. அந்தப் பழமொழியை யாராவது சந்தானத்திற்கு நினைவுப்படுத்தி இருந்தால் இப்படியொரு டகால்டி நடந்திருக்காது.
அரைத்த மாவை அரைத்தால் கூட பரவாயில்லை. அரைத்துப் புளித்துப் போன மாவில் கூடுதலாக பழங்கஞ்சியையும் கலந்து விட்டார்கள்.
பணத்திற்காக எதையும் செய்யும் சந்தானம் ஹீரோயினை ‘செய்ய’த்துணியும் வில்லனுக்கு சப்போர்ட்டாக நாயகியை ‘கூட்டி’வருகிறார். பின் எப்போது அவர் மனம் மாறி காதலாகி கசிந்துருகி..நாயகியை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
சந்தானம் பேசிப்பேசி வாய்விட்டு சிரிக்க வைப்பார் என்றால் அடிதடி டான்ஸ் என்று வாய்பொத்தி சிரிக்க வைக்கிறார். யோகிபாபு மட்டும் க்ளைமாக்ஸில் ஆறுதல் அளிக்கிறார். கூடவே பிரம்மானந்தம் பிரமாதப்படுத்துகிறார். நாயகி ரித்திகா சென் பாவம். அநியாயத்திற்கு வெள்ளந்தியாக இருந்து நம்மை சோதிக்கிறார்.
இம்சை பிடிச்ச முதல்பாதியில் இசையும் பாட்டும் கூடுதல் கடுப்பு. பேராறுதலாக இருப்பது பின்பாதியும் க்ளைமாக்ஸ் காமெடியும் தான். அது மட்டும் இல்லன்னா சந்தானத்திற்கு பினால்டி போட்டுவிடுவான் அப்பாவி ரசிகன்.
சந்தானம் மறுபடியும் ஏ1-ஆக வரவேண்டும். “ஹீரோ”-வை மனசுல சுமக்காம உங்கள் ஸ்டைல்ல ஹீரோவா கண்டினியூ பண்ணுங்க.
2/5