காசே தான் கடவுளடா ரீமேக் ஆகிறது!

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 2

மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி இணைந்து நடிக்க, இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் உருவாகிறது, தமிழின் எவர்கிரீன் திரைப்படம் “காசே தான் கடவுளடா” !

இயக்குநர் R.கண்ணன், “ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை” போன்ற குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் திரைப்படங்களை, தொடந்து தந்து வரும் தரமான இயக்குநர். அவரது திரைப்படங்கள், சமூக கருத்துக்களோடு, அனைத்துவகை ரசிகர்களும், ரசித்து பார்க்கும்படி இருக்கும். இந்த முறை அவர், தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பெற்ற, “காசேதான் கடவுளடா” படத்தை ரீமேக் செய்யவுள்ளார். தமிழின் க்ளாசிக் திரைப்படமான , “காசேதான் கடவுளடா” படத்தில் தமிழின் புகழ்மிக்க மூத்த நடிகர்களான, முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஆச்சி மனோரமா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் உருவாகும், இப்படத்தின் ரீமேக் வடிவத்தில், முத்துராமன் கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகிபாபுவும், ஆச்சி மனோரமா பாத்திரத்தில் நடிகை ஊர்வசி அவர்களும் நடிக்கவுள்ளார்கள். நடிகர் கருணாகரன் உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க தமிழின் முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.