இளைஞர்களின் உந்து சக்தியாக வாழ்ந்த அற்புத மனிதர்! : ஏ.பி.ஜே.அப்துல்கலாமுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல்

Get real time updates directly on you device, subscribe now.

apj

முன்னால் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :

உண்மை, நேர்மை, திறமை, கடும் உழைப்பு, நாட்டுப்பற்று இருந்தால் ஒருவன் எந்த குக்கிராமத்தில் பிறந்தாலும் எவ்வளவு ஏழையாகப் பிறந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டில் உயர்ந்த பதவியைப் பெற முடியும். உன்னத நிலையை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் டாக்டர் அப்துல்கலாம்.

பதவியில் இருந்த போதும் பதவியில் இல்லாத போதும் உலக மக்களால் ஒன்றுபோல் நேசிக்கப்பட்ட மகான் !

இளைஞர்களின் உந்து சக்தியாக இறுதி மூச்சு வரை வாழ்ந்த அற்புத மனிதர்! இவ்வாறு நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.