‘ராஜாவுக்கு செக்’ – மீண்டும் நடிப்பில் இறங்கிய சேரன்!
‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை இயக்கிய சேரன் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.
‘ராஜாவுக்கு செக்’ என்ற பெயரில் தயாராகும் புதுப்படம் ஒன்றில் தான் சேரன் நடிக்கிறார். அவருடன் நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் ‘மழை’ படத்தை இயக்கிய ராஜ்குமார் தான் தற்போது சாய் ராஜ்குமார் என்று தன் பெயரை மாற்றி இப்படத்தை இயக்குகிறார்.
மலையாளத்தில் பல படங்களை தயாரித்த பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் சார்பில் சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்த படத்தை முதல் முறையாக தமிழில் தயாரிக்கிறார்கள்.
இப்படம் குறித்து அவர்கள் கூறியதாவது, ”ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் சேரன் அவர்களை மிகவும் வியந்து பார்க்கிறோம். சினிமாவை அதிகம் பார்க்கும் நடுத்தர குடும்ப மக்களிடம் சேரன் சார் மிகச் சிறப்பாக சென்று சேர்ந்துள்ளார். எங்கள் இயக்குனர் யும், தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில்ராஜு மற்றும் பூரி ஜெகன்நாத் தயாரிப்பில் ஹலோ ப்ரேமிஸ்தாரா படத்தையும் இயக்கியிருக்கிறார்.
‘ராஜாவுக்கு செக்’ என்ற டைட்டிலே கவனத்தை ஈர்க்கும், திரைக்கதையோடு சரியான புள்ளியில் இணையும். சேரன் சார் குடும்ப கதைகளில் நடித்தவர், சாய் ராஜ்குமார் தமிழில் ஆக்ஷன், தெலுங்கில் த்ரில்லர் படத்தையும் இயக்கியவர், இவர்கள் இருவரும் இணைவதே ஆச்சர்யத்தை உருவாக்கும்.
சேரன் சாரை இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள், ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமையும். படப்பிடிப்பை மீண்டும் துவக்கியிருக்கிறோம், கூடிய விரைவில் மொத்த படமும் முடிந்து விடும்.” என்று கூறினர்.
படத்துக்கு எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்ய, வினோத் யஜமான்யா இசையமைக்கிறார்.