‘Demon’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

Get real time updates directly on you device, subscribe now.

சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய்சேதுபதி & இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளனர். தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.
‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கதாநாயகனாக சச்சின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அபர்நதி கதாநாயகியாக நடிக்கிறார்.
திகைப்பூட்டும் திரைக்கதை மற்றும் புதிய விசித்திரமான காட்சி அமைப்புடன் கூடிய ‘Demon’, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை விரைவில் வழங்கவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் பல அறிமுக இயக்குநர்களுடன் படங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளது, இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.