ஒரே டைட்டிலில் இரண்டு படங்கள் – யார் ரியல் ‘ஹீரோ’?

Get real time updates directly on you device, subscribe now.

‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ் மித்ரன் அடுத்து சிவகார்த்திகேயனோடு புதுப்படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்.

இன்று பூஜையோடு ஆரம்பிக்கப்பட்ட அப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான கேரக்டரில் அர்ஜுன் நடிக்கும் இப்படத்தில் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இந்த டைட்டில் அறிவிப்பு வந்ததும் குஷியான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் லோக்கல் பட டைட்டிலையும் சேர்த்து லோக்கலும் நான் தான், ஹீரோவும் நான் தான் என்று ரைமிங்க்காக மீம்ஸ்களை கிரியேட் செய்து சமூகவலைத்தளங்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே விஜய் தேவர கொண்டா நான்கு மொழிகளில் ஹீரோவாக நடிக்கும் புதுப்படத்துக்கும் ‘ஹீரோ’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இரண்டு ஹீரோக்கள் தனித்தனியாக நடிக்கும் படத்துக்கு ஒரே டைட்டிலா? என்று ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Related Posts
1 of 160

‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்து ‘குற்றமே தண்டனை’ படத்தில் இயக்குனர் மணிகண்டனுடன் திரைக்கதையை எழுதிய பிரபல எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை தான் இப்படத்தை இயக்குகிறாராம்.

‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’ பாணியில் விளையாட்டு த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதுதில்லியில் ஆரம்பமாக இருக்கிறது.

இப்படத்தின் கதாநாயகியாக ‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். ‘காலா’, ‘கபாலி’ புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று இந்தப்படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

டைட்டிலைப் பிடிக்கப் போகும் உண்மையான ‘ஹீரோ’ யார் என்பது போக போகத்தான் தெரியும்.