டிமாண்டி காலனி2- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இரண்டாம் பாகம் என்பது தமிழ்சினிமாவில் வொர்க்கவுட் ஆகாத ஒன்று. அந்த வகையில் இந்த டிமாண்டி காலனி2 எப்படி இருக்கிறது?

2015- ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தில் அருள்நிதி இறந்து போவதாக முடித்திருப்பார்கள். இந்தப்பாகத்தில் அதை தனது வலிமையான திரைக்கதையால் மாற்றியுள்ளார் இயக்குநர். இரண்டாம் பாகத்தை நகர்த்த வேண்டும் என்பதற்காக மிக நேர்த்தியாக ஒரு பின்கதையை வைத்து திரைக்கதை ஆக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து.

அருள்நிதி கொடுத்த வேலைக்கு குறை வைக்காமல் நடித்துள்ளார். கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர் என்பதால் நமக்கு அவர் மீது பரிதாபம் வரவில்லை. பிரியாபவானி சங்கருக்கு படத்தில் பெரிய ரோல். அதைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். சித்தப்பாவாக வரும் முத்துக்குமார் அருமையாக நடித்துள்ளார். அருண்பாண்டியனுக்கு பெரிய வேலை எதுவும் படத்தில் இல்லை

சாம்.சி.எஸ் இசை எனும் பெயரில் பெரிய பெரிய சத்தங்களை இறக்கி விட்டுள்ளார். காதுகளில் அவை படம் முடிந்த பின்னரும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அதீதமாக மெனக்கெட்டு ப்ரேமிங் வைத்துள்ளார். சி.ஜி டீம் கடுமையாக உழைத்து அநியாயத்திற்கு சொதப்பியுள்ளனர்

2021-ஆம் ஆண்டு நடக்கும் கதைக்கு துணையாக 2009-ஆண்டு நடப்பதாக ஒரு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர். அந்த 2009-இன் தொடர்ச்சி தான் 2015 டிமாண்டி காலனி கதை எனவும், அதன் தொடர்ச்சி தான் இந்த 2021 டிமாண்டி காலனி2 கதை எனவும் ஐடியா பிடித்துள்ளார் அஜய். ஐடியாவெல்லாம் ஓகே தான். ஆனால் எமோஷ்னலாக எந்த ஐடியாவுமே வொர்க் ஆகவில்லை. டெக்னிக்கலாக மிரட்டிய படம், உணர்வு ரீதியாக ஒன்றுமே செய்யவில்லை. மேலும் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஒப்பேற்றுதலே தெரிவதால் டிமாண்டி காலனி2 ஒன்றாம் பாகம் அளவிற்கு நம்மை டிமாண்ட் செய்யவில்லை
2.5/5