கோடிகளில் சம்பளம்! : செல்லுபடியாகாத நயன்தாராவின் ஹிட் செண்டிமெண்ட்

Get real time updates directly on you device, subscribe now.

Nayanthara
இன்றைய தேதியில் நயன்தாராவின் கால்ஷூட்டை வாங்குவது தான் பெரிய விஷயமாகியிருக்கிறது கோலிவுட் டைரக்டர்களுக்கு!
தமிழில் மூன்று கோடி வரையும், தெலுங்கில் மூன்றரை கோடி வரையும் சம்பளம் வாங்கும் நயனுக்கு மாயாவில் ஆரம்பித்து அடுத்தடுத்து நடிக்கின்ற படங்கள் எல்லாம் சென்டிமெண்ட்டாக ஹிட்டாகி வருகின்றன.
அந்த ஒற்றைக் காரணத்துக்காகவே இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களின் சாய்ஸ் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார்.
Related Posts
1 of 38
இப்படி தமிழ்- தெலுங்கில் நயனின் ஹிட் செண்டிமெண்ட் செல்லுபடியானாலும் அவரது தாய்மொழியான மலையாளத்தில் மட்டும் செல்லுபடியாகவில்லையாம் .
அங்கே சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருக்கிற ஹீரோக்களே கோடிகளில் சம்பளம் வாங்குவது அபூர்வம். அப்படிப்பட்ட ஏரியாவில் நயனுக்கு மட்டும் கொட்டிக் கொடுத்து விடுவார்களா என்ன?
சமீபத்தில் மம்முட்டியுடன் சேர்ந்து நடித்த படத்தில் லட்சங்களில் தான் சம்பளம் வாங்கியிருக்கிறார் நயன்தாரா.
மலையாளத்தில் அவருடைய செண்டிமெண்ட் செல்லுபடியாகாததால் வந்த வரைக்கும் லாபம் என்பதே அவர் போடும் கணக்கு.