அஜீத்தின்அபிமான இயக்குனருடன் கை கோர்த்த ‘பிக்பாஸ்’ புகழ் ஆரவ்!

Get real time updates directly on you device, subscribe now.

‘பிக்பாஸ்’ சீசன் ஒன்று நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ்.

அவர் தற்போது ‘ராஜபீமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தப்படமே இன்னும் ரிலீசாகாத நிலையில் அஜீத்தின் பேவரைட் இயக்குனரும், அவரை வைத்து காதல் மன்னன், அமர்க்களம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சரணுடன் புதுப்படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்.

இதில் தெலுங்கு நடிகை காவ்யா தப்பார் ஆரவ்வுக்கு ஜோடியாக நடிக்கிறார். பொதுவாகவே சரணின் படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாவற்றையும் கொண்டிருக்கும். ஆனால் இந்த முறை அவர் இதுவரை செய்யாத புது முயற்சி ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்.

Related Posts
1 of 7

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது’ “என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை. இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்‌ஷன் மற்றும் காமெடியும் இருக்கும்.

கமல் சார் நடித்து நான் இயக்கிய ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் தலைப்புக்கும், இந்த தலைப்புக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அந்த படத்துக்கு முதலில் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்று தான் பெயரிடப்பட்டது, ஆனால் பின்னர் ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ என்று மாற்றினோம்” என்றார்.

சைமன் கே கிங் இசையமக்க, கே.வி.குகன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.