செட்டாகாத மெகா கூட்டணி : மல்டி ஸ்டார் படத்தை கிடப்பில் போட்டார் பாலா!
எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கும், இயக்குநர் பாரதிராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கதைப் பஞ்சாயத்து எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இந்த பஞ்சாயத்தில் வேல ராமமூர்த்தி பக்கம் இருந்த பாலா அவர் எழுதிய ‘குற்றப்பரம்பரை’ நாவலின் சிறு பகுதியை படமாக்க திட்டமிட்டிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்தப் படத்தில் தான் விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா என ஐந்து பிரபலமான ஹீரோக்களை நடிக்க வைக்கப் போவதாக கூறப்பட்டது.
பாலாவும் இந்தக் கூட்டணி உண்மை தான் என்று தெரிவித்திருந்த நிலையில் இப்போது திடீரென்று அந்தப் படத்தை தள்ளி வைத்து விட்டதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
ஐந்து ஹீரோக்களை நடிக்க வைப்பதில் மட்டுமில்லாமல், படத்தின் திரைக்கதை அமைப்பதற்கும் இன்னும் கொஞ்சகாலம் தேவைப்படுகிறதாம்.
இதனை கருத்தில் கொண்டு இந்தப் படத்தை பாலா தள்ளி வைத்திருக்கிறார்.
அதற்கு முன்பு புதுமுகங்களை வைத்து ஒரு பட்ஜெட் படமொன்றை இயக்க முடிவெடுத்து விட்ட பாலா அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறாராம்.