கதை சிக்கிடுச்சு.., ஹீரோயின் சிக்கலியே..? – மகனுக்காக வலை வீசும் விக்ரம்

Get real time updates directly on you device, subscribe now.

vikram

Related Posts
1 of 153

தெலுங்கில் மாபெரும் ஹிட்டான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் விக்ரமின் மகன் துருவ்.

‘சேது’ படத்தின் மூலம் தன் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துக் கொடுத்த டைரக்டர் பாலவே தன்னுடைய மகனுக்கு திருப்புமுனையாக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்த விக்ரம் பாலாவை முதல் பட இயக்குநராக்கி விட்டார்.

மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படமென்பதால் படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் முன் நின்று கவனிக்கும் விக்ரம் மகனுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்பதிலும் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.

‘வர்மா’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் துருவ் ஜோடியாக கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.