‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில் அஜீத் நடிக்கவில்லையா?

Get real time updates directly on you device, subscribe now.

‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கப் போகும் புதுப்படத்தை டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கப் போவது உறுதியாகி விட்டது.

இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்த சில தினங்களுக்கு முன்பு அஜீத் வீட்டுக்கு வந்து சென்றார் தயாரிப்பாளர் போனிகபூர். அந்த ஆலோசனையில் டைரக்டர் ஹெச்.வினோத்தும் கலந்து கொண்டார்.

முன்னதாக இப்படம் நேரடித் தமிழ்ப்படம் இல்லை என்றும், ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்றும் உறுதியாகச் சொல்லப்பட்டது.

Related Posts
1 of 47

இதற்கிடையே தான் அஜீத்தை வைத்து இயக்கப் போகும் புதுப்படம் ‘பிங்க்’ ஹிந்திப்படத்தின் தமிழ் ரீமேக் இல்லை என்று இயக்குனர் ஹெச்.வினோத் ட்விட்டரில் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

அப்படியானால் அஜீத் நடிக்கப் போகும் படம் நேரடித் தமிழ்ப்படமா? என்று குழப்பத்தில் இருக்க, தற்போது ஹெச்.வினோத் பெயரில் பரப்பப்பட்ட செய்தி அவருடைய பெயரில் போலியான ட்விட்டர் பரப்பப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

அதன்படி டைரக்டர் ஹெச்.வினோத்துக்கு இதுவரை ட்விட்டரில் எந்த அக்கவுண்ட்டும் இல்லை. அவருடைய பெயரில் உருவாக்கப்பட்டிருப்பது போலியான ஐடி என்று தெரிய வந்துள்ளது.