‘AK 57’ படத்தை நம்பியிருக்கும் காஜல் அகர்வால்!

Get real time updates directly on you device, subscribe now.

ajith

விஜய், தனுஷ், விஷால் என கோலிவுட்டில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டும் கூட கடந்த ஒரு வருடமாக காஜல் அகர்வாலின் மார்க்கெட் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடித்தும் எந்த பிரயோசனம் இல்லை, அதேபோல தெலுங்கில் பிரம்மோற்சவம், ஹிந்தியில் சர்தார் ஹப்பார் சிங் என நடித்த பிரம்மாண்டப் படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இதனால் தெலுங்கில் தேஜாவுடன் ஒரே ஒரு பட வாய்ப்பை மட்டும் வைத்திருப்பவர் தமிழில் ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, விக்ரமுடன் ‘கருடா’ ஆகிய படங்களை  மட்டும் கைவசம் வைத்திருக்கிறார்.

Related Posts
1 of 2,316

இந்த இரண்டு படங்களின் வெற்றி தான் தமிழில் காஜல் அகர்வாலின் மார்க்கெட்டை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் இப்போது அஜித்தின் AK 57 பட வாய்ப்பு தேடி வந்திருப்பதில் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் காஜல்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 57-வது படத்தில் காஜல் அகர்வால் தான் ஜோடியாம்.

ஜீவா, விக்ரம் படங்களை நம்பாத காஜல் அகர்வால் அஜித் படத்தின் ரிலீசைத் தான் பெரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆகையால் எப்போதுமே அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்யும் காஜல் அஜித் படத்தில் குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அஜித் படம் ரிலீசானால் வேற லெவல் என்பதால் தான் இப்படி ஒரு அதிரடி முடிவாம்.