பெண்களுக்கெதிரான வன்முறைகள்! : பொறுப்பா இருங்க இயக்குநர் சொந்தங்களே…

சமூகத்தில் குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஆணவக் கொலை, ஒரு தலைக் காதல் கொலை என பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல வடிவங்கள் பெற்று பெண் சமூகத்துக்கு பெரும் பயத்தைக் கொடுக்கின்றன.
சில தினங்களுக்கு முன்பு சாலையில் தனது அம்மாவுடன் சென்ற ஒரு பெண்ணை ”கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா…” என்று பாடல் பாடி கிண்டல் செய்த சம்பவம் கோர்ட் படி வரை சென்று மாண்புமிகு நீதிபதியே தமிழ்சினிமா இயக்குநர்கள் கொஞ்சமாவது சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்கிற அளவுக்கு நிலைமை பரிதாபகரமாகியிருக்கிறது.
அப்படி ஒரு அறிவுரையைத் தான் தனது சக இயக்குநர்களுக்கு சொன்னார் இயக்குநர் வசந்தபாலன்.
‘பச்சை என்கிற காத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் கீரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’.
இப்படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ சாங் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வசந்த பாலன் ”மிக மோசமான காலக்கட்டத்தில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு தலைக்காதலால் பெண்களை கொலை செய்கிறார்கள். இந்த சூழலில் இயக்குனர்கள் பொறுப்பாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்.” என்றார் உண்மையாக..!
பொறுப்பா கேட்டுக்கங்க இயக்குநர் சமூகமே..!