சந்தோஷ் நாராயணின் இசைக் கச்சேரியோடு களை கட்டப்போகும் ‘காலா’ ஆடியோ ரிலீஸ்!
அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் ரஜினி அதற்கு வலு சேர்க்கும் விதமாக தனது காலா படத்தின் ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
அந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை அப்படியே தனது அரசியல் எண்ட்ரிக்கு பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் அவர் காலா படத்தின் ஆடியோ விழாவை மிகப்பிரம்மாண்டமாக நடத்த சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து படத்தை தயாரித்து வரும் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மே 9-ம் தேதி சென்னையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடத்துகிறார்.
மெட்ராஸ், கபாலி பட புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னதாக வெளியான படத்தின் செம வெயிட்டு பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக நடைபெற உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டுவிட்டர், பேஸ்புக், யூடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.
விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது (Dopeadelicz & RAP குழு) இசைக்குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.
வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர்.