மாவீரன்- விமர்சனம்

ஹீரோ படத்தில் விழுந்த அடியை மறந்த பின் மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ கதையில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்
எதற்கும் பயப்படாத அம்மா, அம்மாவைப் போல தங்கை, இதற்கு நேர் எதிராக எல்லாவற்றுக்கும் பயப்படும் இளைஞனாக சிவகார்த்திகேயன். வாழ்வில் எதையும் அட்ஜெஸ்ட் பண்ணிப் போகணும் என்று சொல்லும் SK ஒரு காமிக்ஸ் ரைட்டரும் கூட. வீரதீரமாக காமிக்ஸில் வரைந்து தள்ளும் அவருக்குள் ஒரு பேண்டஸி குரல் புகுந்து அவரை மாவீரனாக மாற்றினால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை அரசியல், கடற்கரையோரம் உள்ள மக்களின் நில ஆதாரப்பிரச்சனை ஆகியவற்றையோடு பேசுகிறது மாவீரன் படம்
மனரீதியாக மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராகவும், அசீரி குரல் கேட்டு அடித்து அதிரடி காட்டுபவராகவும் சிவகார்த்திகேயன் அசத்தியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிதி சங்கர் கேரக்டர் பெரிதாக எடுபடவில்லை. அவரும் படம் நெடுக சோர்வாகவே வருகிறார். யோகிபாபு கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் கொடுத்த வேலைக்கு குறை வைக்காமல் கலைச்சேவை செய்துள்ளார். இவர்கள் அனைவரின் நடிப்பையும் ஓரமாகத் தள்ளிவிடுகிறார் சரிதா. கண்களால் அவர் காட்டும் ரியாக்ஷன்கள் அட்டகாசம்
இசை அமைப்பாளர் பின்னணி இசை பாடல்கள் இரண்டையும் இன்னும் தரமாக அமைத்திருக்கலாம். விது அய்யண்ணாவின் கேமரா சென்னையின் பூர்வகுடிகளின் வாழ்விடங்களை சிறப்பாக கவர் செய்துள்ளது. எடிட்டர் எதையும் யோசிக்காமல் இன்னும் 30 நிமிட படத்தை வெட்டியிருக்கலாம்
ரைட்டிங்காகவும் நரேட்டிங்காகவும் முன்பாதி படம் சிறப்பாகவே இருக்கிறது. பின் பாதியில் தான் படத்தை எப்படி நகர்த்துவது என்ற குழப்பமும், எப்படியாவது நகர்த்தணுமே என்ற தடுமாற்றமும் இயக்குநரிடம் வந்திருக்கும் போல! பின்பாதியில் எந்தக் காட்சியிலுமே அழுத்தமில்லை. க்ளைமாக்ஸ் எல்லாம் ரொம்பவும் பழசு. முன்பாதிக்காக மட்டும் என்றால் மாவீரனை மாஸாக கொண்டாடலாம்
2.5/5
#Maaveeran #மாவீரன்