ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை- கீர்த்தி சுரேஷ்
கார்த்திக் சுப்புராஜ் இளையராஜா கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் டோரதி. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பங்ஷன் நேற்று நடைபெற்றது. விழாவில் படத்தின் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது,
” இந்தப் படத்தின் கதை படித்ததும் உடனே ஒத்துக்கொண்டேன். ஏனெனில், இது போன்ற படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை. சில நாட்கள் வேலை செய்தாலும் கார்த்திக் சாரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள் ரிஷி, சனந்த் இருவருடனும் கொஞ்ச நாட்களே பணிபுரிந்திருந்தாலும் அவர்களுடன் நல்ல பாண்ட் கிரியேட் ஆகி இருக்கிறது. செப்டம்பர் 25 அன்று படம் வெளியாகிறது. நிச்சயம் உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி”.