நீல நிற சூரியன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

திருநங்கை ஒருவரின் வாழ்வியல் சம்பவங்களே இந்த எமோஷ்னல் சினிமா

சம்யுக்தா விஜயன் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவருக்குள் பெண் தன்மை கருவாகி உருவாகிவிட்டதை உணர்ந்து முழுமையான பெண்ணாக மாறுகிறார். அதனால் அவர் பணி செய்யும் இடத்திலும், வீட்டிலும், வெளி மனிதர்களாலும் எப்படி இன்னலுக்குள்ளாகிறார் என்பதே படத்தின் கதையாக விரிகிறது

படத்தின் இயக்குநர் என்ற பெரும் பொறுப்போடு, படத்தின் முதன்மைப் பாத்திரத்தையும் ஏற்றுள்ளார் சம்யுக்தா விஜயன். மிகச்சிறப்பான நடிப்பால் அவரின் கேரக்டரை உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருது, நடிகைக்கான விருது என்ற லிஸ்டில் இந்த வருடம் ‘சிறந்த திருநங்கை நடிகை’ என்ற பிரிவையும் ஏற்படுத்த வேண்டும். அப்படியான கட்டாயத்தை தனது நல்ல நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சக்யுக்தா விஜயன். இதர நடிகர்கள் யாவரும் நல்ல பங்களிப்பைச் செய்துள்ளனர்

படத்தில் இசை,ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை கச்சிதமாக கையாளப்பட்டுள்ளது. படத்தின் பல இடங்களில் பட்ஜெட் தென்பட்டாலும், அதுவொரு குறையாக துருத்திக்கொண்டு தெரியவில்லை

நல்ல கதையை நல்ல முதிர்ச்சியோடு அணுகியுள்ளார் இயக்குநர் சம்யுக்தா விஜயன். அவர் வாழ்வோடு சம்பந்தப்பட்ட காட்சிகள் என்பதால், அவற்றை நம் மனதுக்கு நெருக்கமாகும் படி படமாக்கியுள்ளார். ஒரு கமர்சியல் படமாக நிச்சயமாக இருக்காது. ஒரு நல்ல விசயத்தைப் பேசியுள்ளது. அதற்காக இப்படம் வரவேற்க வேண்டிய லிஸ்டில் சேர்கிறது

நீல நிறச் சூரியன்- வீரியம் பெரிது
3/5