திரெளபதி2 – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மோகன் ஜியின் மற்றொரு வன்மம் நிறைந்த படைப்பு இந்த திரெளபதி2

திருவண்ணாமலையை தலைமையாக கொண்டு 13-ஆம் நூற்றாண்டில் ஆண்ட வல்லாள மகாராஜா என்பவரின் வரலாற்றை அடியொற்றி இப்படத்தை இயக்கியுள்ளார் மோகன் ஜி. வல்லாள மகாராஜாவின் மகனை சுல்தான் படைகள் கடத்திச் செல்கிறது. மேலும் சுல்தான்கள் இந்து மக்களை தங்கள் மதத்திற்கு மாறச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். இவற்றை முறியடித்து மகாராஜாவின் மகனை மீட்கும் பொறுப்பை ஏற்கிறார் வீரசிம்ம காடகேயர். வல்லாள மகாராஜாவாக நட்டியும், வீரசிம்ம காடகேயராக ரிச்சர்டும் நடித்துள்ளனர். இந்தக் கதையில் நாயகிக்கும் ஒரு பெரும்பங்கை வைத்துள்ளார் இயக்குநர்

“முடிஞ்சா என்னை நடிக்க வச்சிப் பாருங்க” என்று சவால் விடும் நபராகவே எல்லாக் காட்சிகளிலும் நிற்கிறார் ரிச்சர்ட். இன்னும் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு அவர் நடிக்க வேண்டும். நட்டி நன்றாக நடிக்கக் கூடியவர். ஆனால் இந்தக் கேரக்டருக்கு அவர் துளியும் செட்டாகவில்லை. திரெளபதி தேவியாக வரும் நாயகி ரிச்சானா மட்டுமே நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். வில்லன் செராக் கொடுத்த வேலையைச் செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர் படத்தைப் பில்டப் செய்து காட்ட மிகவும் மெனக்கெட்டுள்ளார். அது பெரிதாக பலனளிக்கவில்லை. இசையமைப்பாளர் ஜிப்ரான் படம் தராத உணர்வெழுச்சியை இசையால் தர போராடியுள்ளார்

முழுக்க முழுக்க முஸ்லிம் வெறுப்பை படமெங்கும் நிரவியுள்ளார் மோகன் ஜி. படம் பேசும் அரசியலில் வெறுப்பிருந்தாலும், ஒரு கலைப்படைப்பாகவும் படம் தேறவில்லை. திரைக்கதையில் இன்ட்ரெஸ்டிங் சுத்தமாக இல்லை. வெறுப்பைப் பேசும் படம் ரசிகர்களுக்கும் வெறுப்பையே தந்துள்ளது

1.5/5