விஜய்யின் 60 வது படம்! : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இளைய தளபதி விஜய் நடிக்கப் போகும் 60-வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்விக்கு பல முன்னணி இயக்குநர்களின் தலைகளும் உருண்டது.
எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், மோகன் ராஜா ஆகியோர் இந்த லிஸ்ட்டில் அடிபட்டனர்.
இவர்களில் யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, யாருமே எதிர்பார்க்காத விதம் பரதனுக்கு தனது 60-வது படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் விஜய்.
கடந்த சில தினங்களாக இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையில் இப்போது விஜய்யின் 60-வது படம் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பிரபல நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் விஜய் நடிக்கும் இந்த 60வது திரைப்படத்தை தயாரிக்கிறது.
(இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை). படத்தில் இளையதளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரதன்.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.