எங்கள் தங்கம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

அதிரடி பின்னணி கொண்ட பெண் குடும்பத்தலைவியாக இருக்கும் போது எழும் சிக்கல்கள் தான் சமந்தாவின் எங்கள் தங்கம்

யாருமற்ற அநாதையான சமந்தா தன் காதல் கணவரின் குடும்பத்தோடு அடாப்ட் ஆக முயற்சிக்கிறார். அச்சூழலில் அவரின் பழைய வாழ்க்கைப் பின்னணி அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அவர் கணவரின் குடும்பத்திற்கும் இன்னலை ஏற்படுத்துகிறது. இவற்றை சமந்தா எப்படிச் சமாளித்தார் என்பதே படத்தின் விறுவிறு திரைக்கதை

நாயகியாக சமந்தா தனது முழு அர்ப்பணிப்பைக் கொடுத்துள்ளார். இருந்தும் அவரிடம் பழையா சார்மிங்& எனர்ஜி மிஸ் ஆவதாகவே தெரிகிறது. கணவராக வரும் திகந்த் மஞ்சாலே ஏற்றுக்கொண்ட கேரக்டரை அழகாக உள்வாங்கி நடித்துள்ளார். கெளதமி, ஆனந்த், ஸ்ரீலக்ஷ்மி, குல்ஷன் உள்ளிட்ட பிறநடிகர்கள் எல்லாம் கன கச்சிதமான தேர்வு

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படத்தின் மற்றொரு ஹீரோ. அசத்தலான ப்ரேமிங்ஸ்-ஐ வைத்து கண்களுக்கு விருந்தளித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் இசையால் படத்திற்கு பெரும் எனர்ஜியை கொடுத்துள்ளார்

முதல்பாதியில் மிக நேர்த்தியாக படத்தை நகர்த்திச் சென்றார் இயக்குநர் நந்தினி ரெட்டி. அதற்கு நேர்மாறாக இரண்டாம்பாதி அமைந்து விட்டது. ஓவர் ஆக்சன், ஓவர் எமோஷ்னல், ஓவர் காமெடி என எல்லாமே ஓவராகிவிட்டது. முதல் பாதி அளவிற்கு இரண்டாம் பாதியையும் அமைத்திருந்தால் Sure shot அடித்திருக்கும் எங்கள் தங்கம்
2.75/5