நான் எதிர்பார்த்த சக்சஸ் ‘ஈட்டி’யில் கிடைத்தது : அதர்வா நெகிழ்ச்சி
சினிமாவில் எல்லாவற்றுக்கும் டைமிங் ரொம்ப முக்கியம்.
அப்படி ஒரு டைமிங் ரிலீசால் தான் எதிர்பார்த்ததை விட மிகப்பிரம்மாண்டமான வெற்றியை அறுவடை செய்திருக்கிறது அதர்வா நடிப்பில் ரிலீசான ‘ஈட்டி’.
முதலில் டிசம்பர் 4 ம் தேதி ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டது. ஆனால் சென்னையில் பெருமழைக்கு வாய்ப்பு உண்டு என்கிற வானிலை அறிக்கையின் எச்சரிக்கையை புறம் தள்ளாமல் உடனே ரிலீசை டிசம்பர் 11 ம் தேதிக்கு மாற்றி வைத்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
அப்படி ஒரு திட்டமிடலால் தான் இன்றைக்கு உங்கள் முன்னால் சக்சஸ் மேடையில் நின்று பேசுகிறேன் என்றார் ஹீரோ அதர்வா…
நான் இந்த படத்துக்காக இரண்டு வருடங்களாக மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளேன். அந்த உழைப்பு சாதாரணமானது அல்ல. பல நாட்களாக ஈட்டி படத்தின் வெளியீடு தள்ளி கொண்டே சென்றது. படம் வெளியாக போகிறது என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த போது திடீர் என்று படம் மழை காரணமாக தள்ளி சென்றது. அதன் பின்பு மக்கள் மழையின் பிடியில் இருந்து மீண்டால் போதும் என்று நினைத்து கொண்டு இருந்தோம்.
அப்போது தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு படத்தை பதினோராம் தேதி வெளியிட போவதாக கூறினார். அது சரியான முடிவு என்பது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சுவைத்த பிறகு தான் எனக்கு புரிந்தது. இப்படி ஒரு சக்சஸ் மேடையில் நானும் நமது படத்துக்காக பேச மாட்டோமா என்று ஏங்கியிருந்தேன். அதை எனக்கு ஈட்டி கொடுத்திருக்கிறது. மழையின் பிடியில் இருந்து மீண்ட மக்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக ஈட்டி அமைந்தது என்பதில் மாற்று கருத்தே இல்லை. என்று நெகிழ்ந்தார் அதர்வா.
பின்னர் பேசிய தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் ”நாங்கள் எப்போதும் தரமான படங்களையே எங்களுடைய நிறுவனத்தில் தயாரித்து வருகிறோம். நாடோடிகள் படத்துக்கு பின்னர் எங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. அதை போல் தான் நாயகன் அதர்வா அவர்களும் மிகப்பெரிய வெற்றியை சுவைக்க காத்துகொண்டு இருந்தார். எங்கள் நிறுவனம் மற்றும் நாயகனாகிய அதர்வா ஆகிய இருவருக்கும் இப்படம் மிகப்பெரிய பெயர் சொல்லும் படியான வெற்றியாக அமைந்திருந்தது. எல்லோரும் கூறியது போல் ஈட்டி திரைப்படத்துக்கு மாபெரும் வரவேற்ப்பை மக்கள் தந்தது போல், பத்திரிக்கையாளர் மற்றும் மீடியா நண்பர்கள் படத்தை பற்றி துளி கூட நெகடிவ் விமர்சனம் எழுதாமல் , படத்தை மிகச்சிறந்த படமாக மட்டும் எழுதி வெற்றிக்கு வித்திட்டமைக்கு நன்றி என்றார்.
சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் திரு. மைக்கேல் ராயப்பன், நாயகன் அதர்வா முரளி, இயக்குநர் ரவி அரசு, ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, படத்தொகுப்பாளர் ராஜா முகமது மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.