எலக்சன்- விமர்சனம்
இன்றைய அரசியல் எதார்த்தத்தை கடந்த கால அரசியலோடு இணைத்துச் சொல்லியிருக்கும் படம் எலக்சன்
ஹீரோ உறியடி விஜய்குமார் வேலையுண்டு காதல் உண்டு என வாழ்கிறார்..அவரின் அப்பா ஜார்ஜ் மரியான் கட்சிமேல் மிகவும் பிடிப்புள்ள ஒரு கடைக்கோடித் தொண்டன்..கட்சியை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதவர்..அவரின் இந்தக் கட்சிப்பாசத்தால் மகன் விஜய்குமார் காதல் பறிபோகிறது. பின் ஒரு கட்டத்தில் தன் அப்பாவிற்காக ஹீரோ விஜய்குமார் தேர்தலில் நிற்கும் சூழல் வருகிறது. தேர்தலில் ஹீரோ வென்றாரா? என்பது படத்தின் மீதிக்கதை
விஜய்குமார் வழக்கம் போல் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். தனது மாமாவிடம் குரல் உயர்த்தி ஆற்றாமையில் பேசும் காட்சியில் கவனிக்க வைக்கிறார். மாமாவாக வரும் பாவேல் நவகீதன் நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். அவரின் கேரக்டர் ஆர்க் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் மரியான் சரியான நடிப்பை கொடுத்து தன் கேரக்டரை மரியாது வைக்கிறார். மற்றபடி இரண்டு ஹீரோயின்களும் தேவைக்குத் தகுந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி இயல்பாக நடத்துள்ளார்.
இசையில் நல்ல அழுத்தம் இருக்கிறது. பாடல்களும் பராவாயில்லை ரகம். ஒளிப்பதிவாளர் பாடல் காட்சிகள், மற்றும் தேர்தல் காட்சிகளில் நன்றாக உழைத்துள்ளார்
கதைக்கு நல்ல பேக்ட்ராப் அமைத்த இயக்குநர் ஷார்ப்பான ஸ்கிரிப்ட் எடிட்டிங் செய்ய தவறிவிட்டார். கதையின் ஓட்டம் ஆங்காங்கே ஜம்ப் ஆகிறது பெரும் மைனஸ். ஒருசில சமூக எதார்த்தங்களை வெளிப்படையாக பேசிய விதத்தில் இந்த எலக்சன் ஓகே ரகமாக இருக்கிறது
2.75/5