தமிழகம் முழுவதும் 200 தியேட்டர்களில் ரிலீசாகும் அல்லு அர்ஜூனின் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’!

Get real time updates directly on you device, subscribe now.

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் நடிப்பில் நாளை மே 4-ம் தேதி ரிலீசாகும் படம் ‘நாபேரு சூர்யா நாஇல்லு இந்தியா’.

தமிழில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் ரிலீசாகும் இந்தப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது.

இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருக்கிறார். அல்லு அர்ஜூனின் அப்பாவாகவும் மனோதத்துவ மருத்துவராகவும் அர்ஜூன் நடித்திருக்கிறார்.

நெகட்டிவ் கேரக்டரில் சரத்குமார் நடிக்கும் இந்தப் படத்தை வம்சி இயக்கியுள்ளார். விஷால் சங்கர் இசையில் ராஜீவ் ரவி ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

அண்மைக் காலமாக மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற தெலுங்கு நடிகர்களின் படங்கள் நேரடியாக தமிழகத்தில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகின்றன.

அந்த வகையில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படத்தை முதல் முறையாக தமிழகத்தில் வெளியிடுகிறது முன்னணி விநியோக நிறுவனங்களின் ஒன்றான சக்தி பிலிம் பேக்டரி.

மேற்கண்ட வெற்றிப் படங்களின் வரிசையில் அல்லு அர்ஜூன் நடித்த இந்த படமும் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டில் மட்டும் 150 தியேட்டர்களில் தமிழிலும், 50 தியேட்டர்களில் தெலுங்கிலும் என மொத்தம் 200 தியேட்டர்களில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படம் ரிலீசாகிறது.