‘சரவணன் இருக்க பயமேன்’ செம ஹிட்?! : சாட்சிக்கு வந்த விநியோகஸ்தர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

‘பாகுபலி’யின் நாலுகால் பாய்ச்சலில் அதையொட்டி ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்ட எல்லாப் படங்களும் ஜூன், ஜூலைக்கு தேதிகளை மாற்றிக் கொண்டு ஒதுங்கிக் கொண்டன.

ஆனால் அது ரிலீசான ரெண்டாவது வாரத்திலேயே கையில் கிடைத்த அதிகப்பட்ச தியேட்டர்களில் ”சரவணன் இருக்க பயமேன்” படத்தை தைரியமாக ரிலீஸ் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

கலவையான விமர்சனங்கள் ஒருபக்கம், ‘பாகுபலி’  ஃபீவர் இன்னொரு பக்கம் இந்த இரண்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் 10 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதில் உதயநிதி செம உற்சாகம். அதே உற்சாகத்தோடு நாயகி ரெஜினா உள்ளிட்ட படக்குழுவுடன் சக்சஸ் மீட்டில் நிருபர்களை சந்தித்தார்.

வழக்கமாக சக்சஸ் மீட் என்றால் படக்குழுவினர் மட்டும் தான் நிருபர்களை சந்திப்பார்கள். ஆனால் வெற்றியை உறுதி செய்ய சரியான ஆட்கள் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தானே?

Related Posts
1 of 7

sib1

அதனால் தன் படத்துக்குக் கிடைத்த உறுதியான வெற்றிக்கு சாட்சியாக கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டர் உரிமையாளர் துரைராஜ், வட ஆற்காடு வினியோகஸ்தர் ஸ்ரீனிவாசன், கோயமுத்தூர் வினியோகஸ்தர் ராஜ மன்னார், மதுரை வினியோகஸ்தர் குணசேகரன், ஐடிரீம்ஸ் திரையரங்கு உரிமையாளர் மூர்த்தி ஆகியோரையும் அழைத்திருந்தார்.

சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்துக்கு பிறகு பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது ”சரவணன் இருக்க பயமேன்.” இடையில் சில படங்கள் சரியாக ஓடவில்லையே தவிர, அவை தவறான படங்கள் இல்லை. ‘பாகுபலி’ சுனாமிக்கு மத்தியில் படத்தை ரிலீஸ் செய்யலாமா? வேணாமா? என்ற தயக்கத்தில் தான் இருந்தேன். என் வினியோகஸ்தர் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால் தான் ரிலீஸ் செய்ய முடிந்தது. குறிப்பிட்ட அளவு, நல்ல திரையரங்குகளை பிடித்து கொடுத்தார்கள். இன்னும் கூட 80 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றார்.

”சரவணன் இருக்க பயமேன்” ரிலீஸுக்கு முதல் நாள் வரை ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக ”பாகுபலி” ஓடிக்கொண்டிருக்கும் போது தைரியமாக ரிலீஸ் செய்தார் உதயநிதி, படமும் வெற்றியை பெற்றுள்ளது. பாகுபலியின் விநியோக உரிமை கிடைக்காதவர்களுக்கு இந்தப்படம் ஒரு நல்ல வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறது திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்!.

உதயநிதி இருக்க பயமேன்!