எப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’?

Get real time updates directly on you device, subscribe now.

ப்படி ஒரு கேள்வியைத்தான் படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இயக்குனர் கெளதம் மேனனிடம் தனுஷ் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பல வருடங்கள் தயாரிப்பில் கிடந்து ஒரு வழியாக எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து செப்டம்பர் 6-ம் தேதி ”எனை நோக்கி பாயும் தோட்டா” ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பைனான்ஸ் பிரச்சனை தீராத காரணத்தால் மீண்டும் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் படம் ஒரு வாரம் தள்ளிப்போய் செப்டம்பர் 12-ம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் பிரச்சனையை எப்படியாவது தீர்க்க வேண்டுமென்று லண்டனுக்கு சென்ற கெளதம் மேனன் புதிதாக படமொன்று இயக்கித் தருவதாகச் சொல்லி லைகாவிடம் ஒரு பெரும் தொகையை வாங்கி வந்தார்.

Related Posts
1 of 176

அதோடு தோட்டாவுக்கு பிரச்சனை தீர்ந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட, அப்போது தான் லைகா நிறுவனம் கெளதம் மேனனுக்கு செக் வைத்தது. வருகிற செப்டம்பர் 20-ம் தேதி ”காப்பான்” ரிலீசாகிறது. அதற்கு முந்தைய வாரமான செப்டம்பர் 12-ம் தேதி ”எனை நோக்கி பாயும் தோட்டா” ரிலீசானால் ”காப்பான்” படத்தின் வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படும். அதனால் ”எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தை அக்டோபருக்கு தள்ளி வையுங்கள் என்று கண்டிஷனாக சொல்லி விட்டது.

பணம் கொடுத்தவர் சொன்னால் கேட்டுத்தானே ஆக வேண்டும்? வேறு வழியில்லாமல் ”எனை நோக்கி பாயும் தோட்டா” ரிலீசை அக்டோபருக்கு தள்ளி வைத்திருக்கிறாராம் கெளதம் மேனன். ஆனால் அக்டோபரில் சிவகார்த்திகேயனின் ”நம்ம வீட்டுப் பிள்ளை”, சந்தானத்தில் ”சர்வர் சுந்தரம்”, விஜய்யின் ”பிகில்” என வாராவாரம் படங்கள் ரிலீஸ் வரிசையில் நிற்பதால் எப்பத்தான் ரிலீசாகும் ”எனை நோக்கி பாயும் தோட்டா” என்கிற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.