மீண்டும் காக்கி உடுப்பு போடும் அருண் விஜய்!

Get real time updates directly on you device, subscribe now.

‘தடம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மாஃபியா’, ‘அக்னி சிறகுகள்’, ‘பாக்ஸர்’ என பிஸியாக இருக்கிறார் அருண் விஜய்.

இந்தப் படங்கள் எல்லாம் ரிலீசுக்கு அடுத்தடுத்து தயாராக இருக்க, தற்போது ஹரிதாஸ் படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் புதுப்படத்தில் இணைந்திருக்கிறார் அருண் விஜய்.

குற்றம் 23 படத்தைத் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் படமான இந்தப் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

Related Posts
1 of 137

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 11 -ம் தேதி எளிமையான பூஜையுடன் துவங்கியது. பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இயக்குநர் நரேன் மற்றும் இயக்குநர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த வகை படங்கள் தமிழுக்கு புதிதல்ல ஆனால் இதுவரை வந்தவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இதுவரை யாரும் பார்த்திராத பாணியில் இப்படம் புதிதாக இருக்கும். நடப்பு சூழலில் உள்ள சமூக அவலத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு தீவிரமாக அலசும் ஒரு த்ரில்லர் படமாக இந்தப்படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன்.

படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ‘சினம்’ தான் இந்தப் படத்தின் தலைப்பாக இருக்கும் என்கிறார்கள்.