எனக்கு வாய்த்த அடிமைகள் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING : 2.2/5

நோ கருத்து; ஒன்லி சிரிப்பு என்ற டேக்லைனை மாட்டிக் கொண்டு அறிமுக இயக்குநர் மகேந்திரன் ராஜாமணி கிச்சு கிச்சு மூட்ட முயற்சித்திருக்கும் படம் தான் இந்த ”எனக்கு வாய்த்த அடிமைகள்.”

ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ஹீரோ ஜெய்யும், ஹீரோயின் பிரணீதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். ஒரு பக்கம் தன்னை லவ்விக் கொண்டே இன்னொரு பக்கம் வெறொரு இளைஞனை ரூட்டு விடும் பிரணீதாவின் ஒரே கோப்பையில் ரெண்டு வாய் பார்முலாவைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெய் அவரைப் பிரிந்து காதல் தோற்றுப் போன சோகத்தில் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

அவரைத் தேடி தெருத்தெருவாக அலையும் அவரது நண்பர்களான பேங்க் கேஷியர் கருணாகரன், ஷேர் ஆட்டோ டிரைவர் காளி வெங்கட், கால் சென்டரில் வேலை செய்யும் நவீன் மூவரும் வெவ்வேறு பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? நண்பன் ஜெய்யை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினார்களா? என்பதே கிளைமாக்ஸ்.

ஹீரோ ஜெய் என்றாலும் படம் முழுக்க ஒரே ஒரு அறையில் இருந்து கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்கிற அவரது காட்சிகள் ஒரு லெவலுக்கு மேல் போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒரே மாதிரியான நடிப்பும் இன்னொரு குறை. போதாக்குறைக்கு ஸ்டண்ட் காட்சிகளும் மிரட்டல் என்கிற அளவுக்கு இல்லை. பிரணீதாவுடன் சில காட்சிகளில் லவ், டூயட் அவ்வளவே தான்.

Related Posts
1 of 50

நாயகியாக வரும் பிரணீதாவின் முட்டை சைஸ் கண்களின் அழகுக்கே அம்பூட்டு ரசிகர்களும் அடிமைகளாகி விடுவார்கள். படம் முழுக்க ஆங்காங்கே அடல்ஸ் ஒன்லி ஐயிட்டங்களை தூவிவிட்ட இயக்குநர் பாடல் காட்சிகளில் மட்டும் பிரணீதாவை முழுக்க போர்த்திக் கொண்டு ஆட வைத்திருக்கிறார். இது என்ன மாதிரியான மெண்டாலிட்டி டைரக்டர் சார்?

ஜெய்யின் நண்பர்களாக வரும் காளி வெங்கட், கருணாகரன், நவீன். மூன்று பேரில் நிஜமாகவே நம்மை சிரிக்க வைப்பது காளி வெங்கட் தான். கருணாகரனெல்லாம் பேசாமல் நகைச்சுவை செய்வதை விட்டு விட்டு அண்ணன், நண்பன் கேரக்டர்களில் நடிப்பது உத்தமம். மனோதத்துக டாக்டராக வரும் தம்பி ராமையா வழக்கமான நடிப்பு.

அஞ்சலியும், சந்தானமும் கெஸ்ட் ரோலில் வந்தாலும் வேஸ்ட் ரோலுப்பா என்று சொல்ல வைக்காமல் வந்து செல்கிறார்கள். காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரனை விடுங்க, கருணாகரனுக்கு ஜோடியாக வருகிற அந்த இளம் பெண்ணும் கூட தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்!

சந்தோஷ் தயாநிதி இசையில் ‘கண்ணாடிப் பூவுக்கு’ மெலோடிப் பாடலும், ‘மண்ணெண்ணெய், வேப்பெண்ணெய்’ பாடலும் மனதில் நிற்கின்றன. அதிலும் ‘மண்ணெண்ணெய், வேப்பெண்ணெய்’ பாடலில் டி.வி நிகழ்ச்சிகளை கலாய்த்து படமாக்கியிருப்பது வித்தியாசமான ரசனை. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சியில் கொடைக்கானல் அழகை ரசிக்கலாம். நாயகி பிரணீதாவின் இயல்பான அழகைத் தேட வேண்டியிருக்கிறது.

கழட்டி விடுகிற காதலியா? எந்தப் பிரச்சனை வந்தாலும் கூடவே இருக்கிற நண்பனா? என்கிற அறுதப்பழசான விஷயத்தோடு காதலுக்காக தற்கொலை செய்து கொள்வதெல்லாம் கோழைத்தனம் என்கிற எக்ஸ்ட்ரா அறுதப்பழசையும் சேர்த்து காமெடிப் படமாக தர நினைத்த இயக்குநர் அதற்கான சரக்கு மிக்ஸிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

எனக்கு வாய்த்த அடிமைகள் – காதலும், காமெடியும் சேர்ந்த கலவை!