திரும்ப திரும்ப சர்ச்சையில் சிக்கும் ஹன்சிகா!

Get real time updates directly on you device, subscribe now.

ல மாதங்களாக தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஹன்சிகா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக நடித்துக் கொண்டிருக்கும் படம் மகா.

ஜமீல் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இப்படம் ஹன்சிகாவின் 50-வது படம். கையில் சுருட்டு புகைத்தபடி ஹன்சிகா கொடுத்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதேபோல ஒரு மசூதியின் முன்னால் உட்கார்ந்து தொழுது கொண்டு வெளியிடப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்தோடு வந்த செகண்ட் லுக் போஸ்டரும் சர்ச்சையில் சிக்கியது.

Related Posts
1 of 8

இந்நிலையில் 2019 ஆங்கில புத்தாண்டையொட்டி வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

அதில் ரத்தத்தால் நிரப்பப்பட்டுள்ள குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டு கையில் துப்பாக்கியுடன் பிளையின் கிஸ் கொடுப்பது போல போஸ் கொடுத்துள்ளார் ஹன்சிகா.

புத்தாண்டு அதுவுமாக இப்படி ரத்தத்தை காட்டியா வாழ்த்து தெரிவிப்பது? என்று பலரும் அந்தப் போஸ்டரை கடுமையாக விமர்சித்து வருவதோடு 50வது படத்தில் ஏன் ஹன்ஷிகா தொடர்ந்து சர்ச்சையில் சிக்குகிறார்? இதெல்லாம் அவருக்குத் தேவைதானா? என்றெல்லாம் கேள்வியெழுப்புகிறார்கள். ஆனால் போஸ்டரில் ஹன்சிகா கெத்தாக இருப்பதாகக் கூறி பெருமைப்படுகிறார்கள் சில ரசிகர்கள்.