டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் ஆகிறது ‘ஃபால்’ தொடர்!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஃபால்’ இணைய தொடரினை வெளியிட்டுள்ளது. இத்தொடரில் நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்தொடர் வெளியாவதற்கு முன்னதாக, டிசம்பர் 8ஆம் தேதி வியாழன் அன்று, இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தின் சிறப்புக் காட்சி ஊடகங்களுக்காக திரையிடப்பட்டது.
இத்தொடரில் நாயகியாக நடிக்கும் நடிகை அஞ்சலி கூறுகையில்,
“ஃபால் எனக்கு மிகவும் ஸ்பெஷலான தொடர். வழக்கத்திற்கு மாறான ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். இத்தொடரில் எனது பெயர் திவ்யா. எனக்கு திரில்லர்கள் பிடிக்கும், இத்தொடர் நல்ல திரில்லர் அனுபவத்தை தரும். இந்தத் தொடரில் பல திருப்பங்கள் உள்ளன. அனைவரின் கதாபாத்திரங்களும் அனைவரையும் கவரும் வகையில் வலுவானபாத்திரமாக இருக்கும். இது ஹாட்ஸ்டாருக்கான எனது இரண்டாவது படமாகும். ஹாட்ஸ்டார் இணைந்து பணியாற்ற மிகவும் வசதியான ஒரு தளமாகும்.”
#Fall