பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலரை கரம் பிடித்த சன் டிவி தொகுப்பாளினி!

Get real time updates directly on you device, subscribe now.

manimegalai

பிரபல சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை.

தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் திடீரென்று நேற்று தனது நெருங்கிய நண்பரும், காதலருமான ஹுசைனை திருமணம் செய்து கொண்டார்.

மணிமேகலை இந்து மதத்தைச் சேர்ந்தவர், அவரது காதலர் ஹூசைன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். இதனாலேயே மணிமேகலை வீட்டில் அவருடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் தன் காதலில் உறுதியாக இருந்த மணிமேகலை நேற்று நண்பர்கள் முன்னிலையில் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்திருக்கிறார்.

”இன்று நாங்கள் திடீர் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். நான் எவ்வளவோ போராடியும் என் அப்பாவின் மனதை என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் என்னுடைய குடும்பத்தை எதிர்த்து இன்று என் காதலனை கரம் பிடித்துள்ளேன். என்றைக்காவது ஒருநாள் என்னுடைய அப்பா எங்களை ஏற்றுக் கொள்வார்” என நெகிழ்வோடு தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் மணிமேகலை.