எம்.ஜி.ஆர் – என்.டி.ஆர் – எஸ்.டி.ஆர் : இவங்களுக்கு அப்புறம்?!

Get real time updates directly on you device, subscribe now.

gv

சையமைப்பாளராக இருந்த வரை இந்தப் புள்ளையும் பால் குடிக்குமா? என்கிற ரேஞ்சிலேயே முகத்தை வைத்துக் கொண்டிருந்தவர் ஜி.வி.பிரகாஷ்.

அப்படிப்பட்டவர் நடிப்பில் ரிலீசான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றைய தேதியில் இளம் ஹீரோக்களில் அதிக படங்களை கைவசம் வைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ் தான்.

டார்லிங் 2, திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஜீ.வி.பிரகாஷ்குமார் தான் இப்போதைக்கு முன்னனி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்கனர்களின் அபிமான ஹீரோ.

Related Posts
1 of 7

பென்சில் படத்தைத் தொடர்ந்து வருகிற ஜூன் 17-ம் தேதி எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் ரிலீசாகிறது. எவ்வளவு செலவு வைத்தாலும் தாங்கக் கூடிய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சாம் ஆண்டன் இயக்கியிருக்கிறார். ஜி.விக்கு ஜோடியாக மீண்டும் ஆனந்தியே இதிலும் நாயகியாக நடித்திருக்கிறார்.

இதுபோக பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புருஷ் லீ, ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு, ஷங்கர் – குணா இயக்கத்தில் கெட்ட பையன் சார் இந்த கார்த்தி, சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் புதிய படம், சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம், ஸ்ரீ கீரின் புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம், ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஒரு படம் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

தயாரிப்பாளர்கள் – இயக்குநர்களின் நம்பிக்கை நாயகன் ஆகி விட்ட ஜிவி இப்போது மக்களால் தங்களது பெயரை முன்றெமுத்தாக சுறுக்கி அழைக்க பெற்று பெரும் வெற்றி பெற்ற நடிகர்கள் வரிசையில் ஜீ.வி.பியும் இணைந்து விட்டார் என்பது தான் ஆச்சரியம். அட ஆமாங்க… எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், எஸ்.டி.ஆர் இவங்களுக்கு அப்புறம் ஜி.வியும் இணைந்து விட்டாராம்.

எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி, சிவாஜி – பத்மினி, ரஜினி – ஸ்ரீ பிரியா, கமல் – ஸ்ரீதேவி, விஜய் – சிம்ரன், அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட வசூல் சாதனை ஜோடிகள் வரிசையில் தற்போது ஜி.வி – ஆனந்தி ஜோடி இணைந்துள்ளது.