சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ‘ஜின்’

Get real time updates directly on you device, subscribe now.

மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அம்னுஷ்ய நிகழ்வை மையாகக் கொண்ட படம் தான் ‘ஜின்’. ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இப்படத்தை பற்றி இளம் அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில் “ கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ் காந்த் ஆகியசாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வை சுற்றி அமைந்ததே ‘ஜின்’ திரைப்படத்தின் கதை.

Related Posts
1 of 2

எம்.ஜி.ஆர்-ன் ‘அன்பே வா’, ரஜினி அவர்களின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு பங்களாவில் படபிடிப்பு நடத்தினோம். திகில் படத்திற்கு ஏற்றவாறு இருண்டு இருந்த அந்த கட்டிடத்தில் கொடிய மிருகங்களும் கூடி இருந்தது.

“எனக்கு இந்த படத்தை எழுதுவதிலோ, படமாக்குவதிலோ எந்தவித சிரமும் ஏற்படவில்லை ஏனெனில் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டது. அந்த ஐவரில் நானும் ஒருவன்” என்று பீதியை கிளப்பி சிரிப்புடன் விடைபெற்றார் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன்.