G2 வில் இணைந்துள்ளார் நடிகை வாமிகா கபி!
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் “G2′. தொடர் திரில்லர் திகில் படங்கள் மூலம் கலக்கி வரும் நாயகன் ஆத்வு சேஷ் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன், தற்போது நாயகியாக பாலிவுட் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன், G2 ஒரு பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது.
புதிரான உளவாளியாக மீண்டும் நடிக்கும் அதிவி சேஷ் நடிக்க, வாமிகா கபி மற்றும் இம்ரான் ஹாஷ்மியுடன் முரளி ஷர்மா, சுப்ரியா யர்லகட்டா மற்றும் மது ஷாலினி உட்பட ஒரு பெரிய நட்சத்திர நடிகர்கள் குழு இணைந்து நடிக்கின்றனர்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் – மற்றும் ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் சார்பில் டி ஜி விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ள G2 திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. பவர்ஹவுஸ் நடிகர்கள் மற்றும் ஸ்பை த்ரில்லர் வகையில் இதுவரை இல்லாத களத்தில் உருவாகியுள்ள கதையில், G2 சந்தேகத்திற்கு இடமின்றி முற்றிலும் புதிதான அனுபவமாக இருக்கும். G2 விரைவில் பெரிய திரைகளில் வரவிருக்கும் நிலையில், முற்றிலும் புதிய களத்திற்குள் பயணிக்கத் தயாராகுங்கள்!