அரசியலை கிழித்து தொங்க போட வரும் “ஒபாமா உங்களுக்காக”

Get real time updates directly on you device, subscribe now.

”அது வேற இது வேற” படத்தை தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு “ஒபாமா உங்களுக்காக ” என்று பெயரிட்டுள்ளார்.

பலரிடம் கதை கேட்டு, ஆராய்ந்து தேர்வு செய்த இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது .

அரசியலை அடித்து துவைத்து காயப்போடுகிற படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் பிருத்வி நடிக்கிறார். இதில் ஜனகராஜ் இதுவரை ஏற்றிராத புது அவதாரம் ஏற்கிறார்.

நாயகியாக புதுமுகம் பூர்ணிஷா அறிமுகமாகிறார். இயக்குநர்களாகவே விக்ரமன் ,கே.எஸ். ரவிக்குமார் ரமேஷ் கண்ணா, மற்றும் டி. சிவா, நித்யா, ராம்ராஜ், தளபதி தினேஷ், செம்புலி ஜெகன், கயல் தேவராஜ், விஜய் டிவி புகழ் கோதண்டம், சரத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தியிருக்கிறார்.

Related Posts
1 of 134

“பாஸ்மார்க்” படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தனது பெயரை “நாநிபாலா” என்று மாற்றிக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்… ”தாமஸ் ஆல்வா எடிசன் போனை கண்டுபிடித்தது பேசுவதற்காகத் தான் ஆனால் ஆன்ட்ராய்ட் மொபைலில் பார்க்க முடியாததோ, சாதிக்க முடியாததோ எதுவும் இல்லை என்றாகி விட்டது.

“ஒபாமா உங்களுக்காக படத்தின் “கதையின் நாயகனாக செல்போன் ஒன்று முக்கியமாக இடம் பெறுகிறது. அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்க விடும் படமாக இது இருக்கும்” என்றார்.