“கிளாப்” விரைவில் திரையில் !
“கிளாப்” படத்தின் மொத்த படக்குழுவும், படப்பிடிப்பின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்த மகிழ்ச்சியில், பெரும் உற்சாக மனநிலையில் உள்ளனர்.Big Print Pictures தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் கூறியதாவது…
இளமை துள்ளல் மிகுந்த, திறன்மிகு இளம் கலைஞர்களுடன் பணிபுரிந்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர் ஆதியுடன் இணைந்தது, மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. பொதுமுடக்க காலம் முடிந்த நிலையில், படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தபோது, முதல் ஆளாக படப்பிடிப்பை துவக்க, அவர் தான் பெரும் ஆர்வம் காட்டினார். தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக இருப்பதை தாண்டி, இந்தப்படத்தில் அவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் இப்படத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் இப்படத்தில் மிக வலுவான கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். இயக்குநர் பிரித்வி ஆதித்யா அசாத்திய திறமை கொண்ட இயக்குநர். மிகவும் பிரபலமான நடிகர்கள் குழுவையும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான குழுவையும் ஒருங்கே கையாள்வதென்பது எளிய பணியல்ல. ஆனால் இயக்குநர் பிரித்வி ஆதித்யா அனுபவமிக்க இயக்குநரைபோல் மிகத்திறமையாக படப்பிடிப்பை கையாண்டார். இசைஞானி இளையராஜா இசையை உங்களுக்கு வழங்க, படக்குழுவில் நாங்களும் பெரும் ஆவலுடன் உள்ளோம். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Big Print Pictures சார்பில் I.B.கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, P. பிரபா, ப்ரேம், மனோஜ் & ஹர்ஷா இணைந்து தயாரித்துள்ளனர். “கிளாப்” படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் ஆதி, ஆகான்ஷா சிங் மற்றும் க்ரிஷா க்ரூப் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அனுபவ மிக்க நடிகர்களான பிரகாஷ் ராஜ், நாசர் மைம் கோபி மற்றும் முனீஷ்காந்த் இணைந்து நடிக்கிறார்கள்.