அனுராக் காஷ்யப் படத்தை ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் சி.வி.குமார்!

Get real time updates directly on you device, subscribe now.

ன்று முன்னணி இயக்குனர்களாக இருந்து வரும் பல இளம் இயக்குனர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிரூபித்துத் காட்டிய சி.வி.குமார் ”மாயவன்” வெற்றி படம் மூலமாக இயக்குனராகவும் தன்னை முன் நிறுத்தியவர்.
தற்போது, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் ”கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” என்ற புதிய படத்தை இயக்குகிறார்.

இந்தப்படம் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கேங்க்ஸ் ஆப் வசியப்பூர்’ என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் பிரயங்கா ருத் கதாநாயகியாக நடிக்கிறார்.

சென்னையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.