சூடு பிடித்த ‘தளபதி 63’ வியாபாரம்!

Get real time updates directly on you device, subscribe now.

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் டைரக்டர் அட்லீ.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த ‘தளபதி 63’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்டு படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

Related Posts
1 of 206

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான சர்கார், மெர்சல் இரண்டு படங்களும் தமிழ்நாட்டில் 70 கோடி வரை வசூல் செய்தது. அதனால் இந்தப் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்ற கடும்போட்டி நிலவி வருவதாகவும் கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ், உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போடும் இந்த வியாபாரப் போட்டியில் ஸ்கிரீன் ஸீன் என்ற நிறுவனம் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.