கட்டா குஸ்தி2- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இது வில்லன் ஹீரோ ஆட்டமல்ல, கணவன் மனைவி ஆட்டம்

சென்ற பாகத்தில் ஆணாதிக்கத்தை உணர்ந்த விஷ்ணு விஷால் இந்தப்பாகத்தில் அப்ப்டியே வேறரகம். ரயில்வேயில் பணிபுரிந்தபடியே ரெஸ்ட்லர் விளையாட்டிலும் கவனம் செலுத்துகிறார் ஐஸ்வர்யா லெட்சுமி. அவரின் கனவுக்காக ஆறு வயது மகளை கவனித்துக்கொண்டு வீட்டுவேலை அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார் விஷ்ணு விஷால். இந்த க்ளீன் அண்டெர்ஸாண்டிங்-ஐ கெடுப்பது போல கோச் ஒரு திருட்டு வேலைச் செய்கிறார். அந்த வேலையால் கணவன் மனைவி இருவருக்குமிடையே பிரிவு வருகிறது. பிரிவு சரியானதா என்பதே படத்தின் மீதிக்கதை

விஷ்ணு விஷால் எதார்த்தம் மீறாத நடிப்பால் கவர்கிறார். ஆக்சன் காட்சிகளில் கொடிகட்டிப் பறந்துள்ளார் ஐஸ்வர்யா லெட்சுமி. இவர்களின் மகளாக வரும் குட்டிப்பெண் அசத்தியுள்ளார். கருணாஸ், காளிவெங்கட், முனிஷ்காந்த் மூவரின் பங்களிப்பும் படத்திற்கு பேருதவி புரிந்துள்ளது. கருணாஸின் மனைவி கேரக்டர் குட் ஒன். ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு வருகையும் படத்தின் பாசிட்டிவ் அம்சம்

பாஸ்கரன் தனது ஒளிப்பதிவில் ஒரு குறையும் வைக்கவில்லை. சிறப்பான விஷுவல்ஸை தந்துள்ளார். ஷான்ரோல்டன் இசை அமைப்பாளராக அசத்தியுள்ளார், பாடகராக சொதப்பியுள்ளார். பின்னணி இசை ஆறுதல்

இயக்குநர் செல்ல அய்யாவு காமெடியை மட்டுமே மூலதனமாக கொண்டதால் சிலபல லாஜிக்-ஐ கவனிக்காமல் திரைக்கதை எழுதியுள்ளார். தேவையற்ற காட்சிகள் படத்தில் தென்பட்டாலும், தேவையுள்ள காட்சிகளை
இன்ட்ரெஸ்டிங்காக எடுத்ததன் மூலம் அதை நிவர்த்தி செய்துவிடுகிறார். குறைகள் இருந்தாலும் சிரிப்புக்கு உத்தரவாதம் தருவதால் கட்டா குஸ்தி2-வை ரசிக்கலாம்
3/5