சூர்யா நடிக்க மறுத்த கதைக்கு ஓ.கே சொன்ன விக்ரம்! : கெளதம்மேனன் ஹேப்பி

Get real time updates directly on you device, subscribe now.

vikram2

னதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் இயக்குநர் கெளதம் மேனன்.

சூர்யாவை வைத்து அவர் இயக்கவிருந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் திடீரென்று நிறுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் சூர்யா முழுக்கதையையும் கேட்டார். நான் அதை சொல்ல மறுத்ததால் அவர் நடிக்க மறுத்தார் என்று நடந்ததை சமீபத்தில் மீடியாக்களிடம் வெளிப்படையாக சொன்னார்.

மேற்படி படம் நின்று போனதால் கெளதம் மேனன் – சூர்யா இடையிலான நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு மீண்டும் ”கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சூர்யா பல பேட்டிகளில் சொன்னாலும் கெளதம் மேனனோ சூர்யா பக்கம் போகவில்லை.

மாறாக அதே ‘துருவ நட்சத்திரம்’ கதையில் வெறோரு பிரபலத்தை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டார். அவரது முயற்சிக்கு இப்போது முன் வந்து கை கொடுத்திருக்கிறார் நடிகர் விக்ரம்.

ஆமாம், ‘துருவ நட்சத்திரம்’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக விக்ரமிடம் கதை சொல்லியிருக்கிறார் கெளதம் மேனன். கதையைக் கேட்ட மாத்திரத்தில் பிடித்து விட்டதால் கண்டிப்பாக நடிப்பதாக உறுதியளித்திருக்கிறாராம் விக்ரம்.

இதனால் இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி தனது துருவ நட்சத்திரம் படத்தை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் கெளதம் மேனன்.