யாருமே கண்டுக்கலையாம்… : கலைந்தது காஜல் அகர்வாலின் பாலிவுட் கனவு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த காஜல் அகர்வாலுக்கு வயசு ஏறிக்கொண்டே போவதாலே என்னவோ புதுப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகிறது.
விஜய்யின் 60-வது படத்தில் அவர் தான் நாயகியாக நடிப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் ரஜினி முருகன் வசூல் முருகன் ஆகியதால் அப்பட நாயகி கீர்த்தி சுரேஷுக்கு அந்த வாய்ப்பு போய் விட்டது.
இதனால் வருத்தத்தில் இருந்தவருக்கு விக்ரமுடன் ஜோடி சேர வந்திருக்கும் ”கருடா” ஆறுதலை கொடுத்திருக்கிறது.
இருந்தாலும் முன்பு போல் தமிழ், தெலுங்கில் வாய்ப்பு இல்லாததால் பாலிவுட்டுக்குப் போனவர் , அவரது காத்திருப்புக்கு ‘டு லஃப்ஸோன் கி கஹானி’ படத்தில் ரன்தீப் ஹுடா ஜோடியாக சான்ஸ் கிடைத்தது. இதை வைத்தே பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து விடலாம் என்று நினைத்தவருக்கு இப்போது அதிர்ச்சி செய்தி தான் வந்திருக்கிறது.
ஆமாம், இப்படத்தின் படப்பிடிப்பு திடீரென்று ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. பட ரிலீசும் அடுத்த வருடம் ஆகலாம் என்பதால் அது எப்போது ரிலீசாவது, அதைப் பார்த்து மற்ற பாலிவுட் இயக்குநர்கள் நம்மைத் தேடி வருவது? என்று நினைக்கிற போது ”நம்மளோட பாலிவுட் கனவு அம்புட்டுத்தானா..?” என்கிற சோகத்தில் இருக்கிறார் காஜல்.