நான்கு மொழிகளுக்கும் ஒரே குரல் : அசத்தும் ‘மாம்’ ஸ்ரீதேவி

Get real time updates directly on you device, subscribe now.

SRIDEVI

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது வசீகர அழகாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி சினிமா துறையில் காலூன்றி 50 வருடங்கள் ஆகின்றது. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் ‘துணைவன்’ என்ற படத்தின் மூலமாக குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் 300வது படமாக “மாம்” வெளியாகவுள்ளது.

ஸ்ரீதேவியின் 50 ஆண்டுச் சாதனையைக் கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் “மாம்” படத்தை ஜுலை 7, 2017 அன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Posts
1 of 3

மேலும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து பதிப்புகளுக்கும் நடிகை ஸ்ரீதேவியே டப்பிங்கில் பேசுவுள்ளதாகப் படக்குழுவினரால் கூறப்படுகிறது.

அனைத்து ரக ரசிகர்களும் எதிர்பார்க்கும் “மாம்” திரைப்படத்தை Zee ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து வழங்க A Mad Films & Third Eye Productions தயாரித்துள்ளனர். இப்படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.