ஆசையிருக்கு; அகப்படலையே..? : கெளதமேனன் கவலை

Get real time updates directly on you device, subscribe now.

gowtham

‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்துக்கு பில்டப் கொடுக்காமல் இருந்தாலே கெளதம் மேனன் ஓரளவுக்கு தப்பித்திருப்பார். அவர் நேரமோ தெரியவில்லை. அந்தப்படம் தந்த அடியால்

அடுத்தடுத்து கெளதம் மேனன் எடுக்கும் எல்லா முயற்சிகளுமே சிக்கல் இல்லாமல் நடந்தபாடில்லை.

இயக்கம், தயாரிப்பு என ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் தான் இயக்குகின்ற படங்களில் ஒரு சின்ன சீனிலாவது தலை காட்டுவதையோ அல்லது வாய்ஸ் ஓவர் கொடுப்பதையோ வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கெளதம் மேனன்.

Related Posts
1 of 4

சில படங்களில் அப்படி தலை காட்டியவரை நிவின் பால் ஹீரோவாக நடிக்கும் ‘ஜாக்கோபின்டெ சொர்க ராஜ்ஜியம்’ படத்தின் கெளதம் மேனனுக்கு ஒரு முக்கியமான கேரக்டரை கொடுக்க நினைத்திருந்தார் இயக்குநர் வினித் சீனிவாசன்.

கெளதம் மேனனுக்கு கெட்ட நேரமோ தெரியவில்லை. படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் படத்தில் கெளதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறவில்லையாம்.

துபாயில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கெளதம் மேனனால் அங்கு செல்ல முடியவில்லை. சரி அதன்பிறகாவது கெளதம் மேனனை அழைக்கலாம் என்றால் அவரோ செல்வராகவன் படத்தில் பிஸியாகி விட்டார். வேறுவழியில்லாமல் கெளதம்மேனனுக்குப் பதில் வெறோரு நடிகரை நடிக்க வைத்து படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.

வாய்ப்பு வந்தும் இந்தப்படத்தில் தன்னால் நடிக்க முடியாமல் போய் விட்டதே என்று இயக்குநருக்கு போனைப் போட்டு கவலையோடு சொன்னாராம் கெளதம்.