மீண்டும் இணையும் இரு துருவங்கள்?
‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தின் மாபெரும் தோல்வியால் பெருத்த நஷ்டத்தை சந்தித்தவர் இயக்குநர் கெளதம் மேனன்.
அதிலிருந்து மீள சூர்யாவிடன் கால்ஷீட் வாங்கி துருவ நட்சத்திரம் படத்தை வேகவேகமாக ஆரம்பித்தார்.
பூஜை போடப்பட்ட நிலையில் அந்தப்படம் ட்ராப்பானது. கெளதம்மேனன் சொன்ன கதையின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில சமாச்சாரங்கள் சூர்யாவுக்கு பிடிக்காததால் இருவருமே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர்.
இருந்தாலும் இன்னொரு சந்தர்ப்பம் அமைந்தால் கண்டிப்பாக கெளதம் மேனனுடன் இணைவேன் என்று பல பேட்டிகளில் சொல்லி வந்தார் சூர்யா.
இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது போலிருக்கிறது.
என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா படத்தை எடுத்து வரும் கெளதம் மேனன் அந்தப்படம் முடியும் தருவாயில் உள்ளதால் மீண்டும் பூஜையோடு நின்று போன துருவ நட்சத்திரம் படத்தை இயக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இருவரும் ‘இணைந்த கைகள்’ ஆனால் சரி!