அனுஷ்கா நடிக்கும்”காட்டி”!

Get real time updates directly on you device, subscribe now.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் அடுத்ததாக கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் “காட்டி” (Ghaati) என்ற படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
புதிய படத்தின் தலைப்பை அறிவித்த படக்குழு கூடவே பிரீ-லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. போஸ்டரில் புடவை அணிந்தபடி தனது முகத்தை மூடியபடி கம்பீரமாக நடப்பது போல காட்சியளிக்கிறார் அனுஷ்கா.

பரபர காட்சிகள் நிறைந்த பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படமாக காட்டி உருவாகி வருகிறது. ஒரு அப்பாவி குற்றவாளியாக மாறி லெஜண்ட் அவதாரம் எடுப்பதே இந்த படத்தின் கதை. இதில் அனுஷ்கா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.வம்சி மற்றும் ராஜீவ் ரெட்டி இணைந்து யு.வி. கிரியேஷன்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பாக தயாரிக்கும் இந்த படத்தை ஸ்ரீனிவாஸ் ராவ், கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.இந்த படம் தொடர்பான இதர அறிவிப்புகள் படக்குழுவினர்  விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.