இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா!

Get real time updates directly on you device, subscribe now.

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் இன்று காலை நடைபெற்றது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை வெளியிட்டு, உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை துவக்கி வைத்து, வாழ்த்து தெரிவித்தார். கேப்டன் மில்லர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குகிறார்.

Related Posts
1 of 18

கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை வழங்குகின்றன. ஸ்ரீராம் பக்திசரண் சி.கே. பத்ம குமார், வருண் மாத்தூர், இளம்பரிதி கஜேந்திரன் மற்றும் சௌர்ப் மிஸ்ரா ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ்  தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார்.இந்த நிகழ்வில் இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோருடன் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.