ஹைக்கூ- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

இரு காதலும் சில மோதலும் தான் படத்தின் ஒன்லைன்

ஹீரோ ஏகன் கல்லூரி காலத்தில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்தக் காதல் தோல்வியில் முடிகிறது. அதன்பின் வேலை செய்துகொண்டே ஒரு பெண்ணை காதலிக்கிறார். முந்தைய காதலில் செய்த தவறை இந்தக் காதலில் செய்துவிடக்கூடாது என கவனமாக காதலில் செயல்படுகிறார். ஆனால் இரண்டாம் காதலிக்கு இவரது கான்சியஸான காதலே பிரச்சனையாக மாறுகிறது. அதை ஹீரோ எப்படி ஹேண்டில் செய்தார் என்பது படத்தின் கதை

ஏகன் ஏகத்திற்கும் சொதப்புகிறார். எந்த எமோஷ்னலையும் குரல்மொழி உடல்மொழி இரண்டிலும் அவர் கொண்டுவரவே இல்லை. நாயகிகள் பெமினா, ஸ்ரீதேவி இருவருமே அசத்தியுள்ளனர். நாயகனின் நண்பனாக வருபவரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது

படத்தில் சித்துக்குமார் அபாரமான உழைப்பைக் கொடுத்துள்ளார். அவரின் இசையும் பாட்டும் படத்தின் பெரும்பலம். ஒளிப்பதிவாளர் மிக நேர்த்தியான ஷாட்ஸை கம்போஸ் செய்துள்ளார்

ஒரு காதலில் தோல்வியுற்ற காதலனும் காதலியும் அடுத்த காதலில் டிராவல் செய்யும் போது என்னென்ன செய்வார்கள் என்ற உளவியலை மிகச்சரியாக தொட்டுள்ளார் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி. படத்தின் கதையில் இருந்த ஆழமும் நேர்த்தியும் திரைக்கதையிலும் காட்சியமைப்புகளிலும் இல்லை. அதைச் சரியாகச் செய்திருந்தால் இந்த ஹைக்கூவை இன்னும் ரசித்திருக்கலாம்
2.5/5