டிசம்பர்-24 ரேசில் தகப்பன்!

Get real time updates directly on you device, subscribe now.

இந்த வருட பொங்கல் ரேசில் பந்தயம் அடித்த நடிகர் ஜீவா. அவரது ஹிட் வரிசையில் TTT படம் முக்கிய இடம் பிடித்தது. தற்போது அதே வெற்றியை அவரின் தகப்பன் படமும் அமையும் என்கிறார்கள்

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் (Marshall Robinson) இசையமைக்கிறார். படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்திற்கு அவரது இசை கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.