‘ப்பா…யார்ரா இந்தப் பொண்ணு…’ – ஹன்சிகாவை கதற விட்ட ரசிகர்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

 

பிரபுதேவாவின் இயக்கத்தில் ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா.

பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று குட்டி குஷ்பு போல இருந்தவர் சூர்யா, தனுஷ், விஜய் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து குறுகிய காலத்தில் தமிழில் முன்னணி நடிகையானார். தமிழில் படங்கள் ஹிட்டானதால் தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்தது.

இப்படி தொடர்ந்து நடிப்பில் பிஸியானவர் அந்த நெருக்கடியில் தனது மேனியழகை பராமரிக்காமல் விட்டு உடம்பில் சதை போட்டார். கடந்த சில படங்களில் ஹன்சிகாவைப் பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு திருஷ்டி பூசணிக்காய் போல் இருக்கிறார் என்று கமெண்ட் அடித்தார்கள். அதனாலேயே அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் அமையவில்லை.

Related Posts
1 of 5

இதற்கும் ஹன்சிகாவுக்கு சினிமாவிலிருந்து ஓய்வு பெரும் வயது கூட இல்லை. அதற்குள் மார்க்கெட் டல்லடித்ததால் அப்செட் ஆனவருக்கு உடல் எடையைக் குறைக்கச் சொல்லி அவரது நலம் விரும்பிகள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

உடனே களத்தில் இறங்கியவர் தற்போது கொஞ்சம் ஓவராகவே உடல் மெலிந்து போய் ஒல்லிக்குச்சியாக காட்சியளிக்கிறார்.

அவரது இந்த புது லுக்கை சமூகவலைத்தளங்களில் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் ‘ப்பா…யார்ரா இந்தப் பொண்ணு…பேய் மாதிரி இருக்கு…’ என்றெல்லாம் கமெண்ட்டுகளைப் போட்டு கண்டபடி கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

ரசிகர்களிமிருந்து இப்படிப்பட்ட வரவேற்பை எதிர்பார்க்காத ஹன்சிகா தற்போது மீண்டும் எடையைக் கூட்டி பழைய தோற்றத்துக்குப் போய் விடலாமா? அல்லது இப்படியே இருந்து விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.